2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 'இராக அளிக்கை'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்  'இராக அளிக்கை'  என்னும் சங்கீத  நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் புதன்கிழமை (28) மாலை 6.00 மணிக்கு அமிர்தவர்சினி என்னும் இராகத்தில் 'இராக அளிக்கை', பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, இசை ஆசிரியர் திருமதி ஜெகதாம்பிகை கிருபானந்தமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஓர் இராகம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்வாழ்த்தினை செல்வி பௌர்ணமி ஆதவன் இசைப்பார்.  இராக அளிக்கையை செல்வி மதுஜா சிவநாதன் நிகழ்த்தவுள்ளார்.

குயிலுவக் கலைஞர்களாக வயலின் - செல்வி ஜேர்ச் பிறிசில்லா,  மிருதங்கம் -திரு.ச.பிரணவன், கெஞ்சிரா - திரு.அ.சண்முகப்பிரியன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .