2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சேயா படுகொலை வழக்கு: தீர்ப்பு தள்ளிப் போனது

Kogilavani   / 2016 மார்ச் 04 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்குக்கான தீர்ப்பை, நேற்று 3ஆம் திகதியன்று அறிவிப்பதாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று, வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டார்.

இந்நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள வாய்க்காலிலிருந்து இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 13ஆம் திகதியன்று, அவரது சடலம் நிர்மாண நிலையில் மீட்கப்பட்டது.

படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான சமத் ஜயலத்தின் மரபணு அறிக்கை (டி.என்.ஏ), படுகொலை செய்யப்பட்ட சிறுமியான சேயா சந்தவமியின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பகுதிகளுடன் பொருந்தியிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 29ஆம் திகதியன்று நிறைவடைந்தது. சாட்சி அட்டவணையில் 30 பேர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதில் அறுவர் மட்டுமே சாட்சியளித்தனர். அதனடிப்படையிலேயே, இந்த வழக்கின் தீர்ப்பை அளிப்பதற்கான திகதி, எதிர்வரும் 3ஆம் திகதியன்று குறிப்பிடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--