Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட் பக்கெற்றுக்ளை இலங்கைக்குக் கொண்டு வந்த பெண்ணொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர், இன்று செவ்வாய்க்கிழமை (02) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணின் பயணப்பொதியிலிருந்து சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகப் பெறுமதியான 225 சிகரெட் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்;டுள்ளார். இவரிடமிருந்து 225 டசின் சிகரெட் பக்கற்றுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 15 இலட்சம் ரூபாயாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago