2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

'பள்ளிக்குப் பின் கல்வி': புதிய திட்டம் அறிமுகம்

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட மே மாதமளவில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

கொழும்பு, றோயல் கல்லூரியில் Royal MAS விளையாட்டுத் தொகுதியைத் திறந்து வைத்து அங்கு உரை நிகழ்த்திய பிரதமர், உயர்கல்விக்கு மாணவர்களைத்  தயார்படுத்துவதற்காக புதிய கல்வித் திட்டத்தின் கீழ் 'பள்ளிக்குப் பின் கல்வி' என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறினார்.

புதிய கல்வித் திட்டம் குறித்து கல்வி அமைச்சருடனும்  ஏனைய  பங்குதாரர்களுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்தக் கல்வி முறையில் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து  இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், 'இதற்குத் தகுதியான உத்தியோகத்தவர்கள், கல்வி அமைச்சிலும் தொடர்பான நிறுவனங்களிலும் நியமிக்கப்படுவர். வாக்குறுதி அளித்தபடி கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 06 சதவீதம் ஒதுக்கப்படும்.

'எமது தேவைக்குப் பொருத்தமான கல்வி முறைமையை நாம் கொண்டுவர வேண்டும். பழைமைவாதிகள் இதற்கு எதிராகக் கூச்சலிடக்கூடும். எனினும், கல்வியில் நாம் சீர்திருத்தங்களைச் செய்தே ஆக வேண்டும்' எனப் பிரதமர் தெரிவித்தார். 

மேலும், Royal MAS விளையாட்டுத் தொகுதியைப் போன்ற அதி நவீன விளையாட்டுத் தொகுதிகள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கும் கிடைக்க வேண்டும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .