2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் துப்பரவு செய்யும் பணி

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல, ப்ரணெ்டியாவத்த ஆகிய இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஆரிப் சம்சுதீன், தவம், மு.கா.வின்  பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் வழிகாட்டலில் சுமார் 300 தொண்டர் அணியினர் இதுவரைக்கும் பணியாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .