2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

20 லட்சம் ரூபா பெறுமதியான பாபுல் கைப்பற்றப்பட்டது

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( சனத் டெஸ்மன்ட்)

20 லட்சம் ரூபா பெறுமதியான பாபுல், கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாபுல் விற்பனை முகவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரையும் தாம் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 25 கிலோகிராம் பாபுலுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மேலும்  145 கிலோ பாபுல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய பாபுல் தொகை இதுவென கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.எச்.பி. ஹேரத் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--