2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கட்டுநாயக்கா பொருளாதார வலய தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுநாயக்கா பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள சினோ ரெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார வலயத்திலுள்ள தீயணைப்பு படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தன.

இதற்காக கொழும்பிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--