Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வர்த்தக முதலீடுகளை அதிகளவில் இலங்கையில் மேற்கொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் முன்வந்திருப்பதாக கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கு நேற்று கொழும்பில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக அதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு ஹற்றன் நெஷனல் வங்கி கேட்போர் கூடத்தில் நடை இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அமைச்சின் பிரதிநிதி தாவுத் அல் செஸாவி இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அபுதாபிக்கான இலங்கை தூதுவர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
இங்கு அமைச்சர் ரிஸாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில் வளைகுடா நாடுகளில் இலங்கையின் வர்த்தக பங்காளி நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் விளங்குகிறது இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால வர்த்தக தொடர்புகள் இருந்துவருகிறது.
குறிப்பாக 500மில்லியன் அமெரிக்கடொலர் வர்த்தகம் இரு நாடுகளுமிடையே பரிமாறப்பட்டு வருகிறது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயங்கரவாதத்தை இல்லாதொழித்து சமாதான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அவரின் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி கண்டுவருகிறது
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்து எம்முடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன மத்திய வருவாய் உள்ள நாடாக இலங்கையை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்திருப்பதுடன் நியூயோர்க் பத்திரிகை சுற்றுலா பயணத்திற்கு சிறந்த நாடாக குறிப்பிட்டிருப்பதுடன் வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வை எமது நாட்டைப்பற்றி சிந்திக்கவைத்துள்ளது.
இலங்கையில் இடம்பெறும் வர்த்தகம் சம்பந்தமான கருத்தரங்கு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையேயான வர்த்தகம் கைத்தொழில் சம்பந்தமான துறைகளை மேலும் பலப்படுத்த உதவும் தற்போது இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட சகல பிரதேசங்களையும் கட்டியெழுப்பி சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
.jpg)
22 minute ago
37 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
40 minute ago
55 minute ago