2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மல்வானையில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

Super User   / 2011 ஜூன் 13 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள பாடசாலை மாணவர்களுக்கான 21ஆம் நூற்றாண்டின் ஊடகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரரும் 15ஆம் திகதி புதன்கிழமை மல்வானை அல் - முபாரக் தேசியக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பியகம கல்வி வலயத்தின் தமிழ், முஸ்லிம் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விரிவுரைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கு முடிவில் கல்லூரி  அதிபர் ஏ.ஜே.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் மேல் நீதிமன்ற நீதியரசர் எம்.எம். அப்துல் கபூர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக தகவல் திணைக்கள உதவி பணிப்பாளர்களான அலி ஹஸன் மற்றும் ஹில்மி முஹம்மத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .