Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 17 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு, கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் சிவசுப்ரமணிய ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வி.பி.கணேசன் அரங்கத்தில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், ஜ.தொ.கா நிதிச்செயலாளர் முரளி ரகுநாதன் உட்பட்ட கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் விசேட விருந்தினர்களாக பௌத்த சன்மார்க்க இயக்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, ஜனதா மண்டபய இயக்கம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொள்வர் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .