2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சிறுபான்மை இன மக்கள் மாறிவிட்டன

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்து கொழும்பு சிறுபான்மை இன மக்கள் மாறிவிட்டனர் என விஞ்ஞான தொழிநுட்ப பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

தற்போது அரசுக்கு வாக்களிப்தே புத்திசாலித்தனம் என உணர்ந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. அக்கட்சி என்ன கூறினாலும் கொழும்பு மாநகர சபையை  கைப்பற்ற போவது அரசு தான்.

கொழும்பில் உள்ள சிறுபான்மை இன மக்களின் மனோநிலை இப்போது மாறிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் எதுவித பிரயோசனத்தையும் அடையப்போவதில்லை என்பதை அம்மக்கள் உணாந்;துள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--