2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மாகாண சபை உறுப்பினர்களிடையே கைகலப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜே.ஏ.ஏ.ல். ஜயசிங்க)

மத்திய மாகாண சபையின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியொருவரின் வீட்டில் நேற்று சனிக்கிழமை  இரவு நடைபெற்ற சந்திப்பின்போது மத்திய மாகாண சபையைச் சேர்ந்த இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலை நிறுத்த முயன்ற மற்றொரு மாகாண சபை உறுப்பினரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.  அம்மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர்.  எனினும் தாமாக மோதலை நிறுத்தும் வரை இம்மோதல் தொடர்ந்தது.

மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. 
 


  Comments - 0

  • சிறாஜ் Monday, 17 October 2011 05:12 AM

    இதுதான் இவர்களின் முன்மாதிரி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .