2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கொரிய மொழிப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்றவர்கள் விளக்கமறியலில்

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி. பாருக் தாஜுதீன்)

கொரிய மொழிப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பரீட்சையில் கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி ஆகிய பரீட்சை நிலையங்களில் இந்த ஐந்து சந்தேக நபர்களும் வேறு நபர்களுக்காக பரீட்சை எழுத முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்களை; நீதிமன்றில் ஆஜர்படுத்திய கறுவாத்தோட்ட பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினர்.

 


  Comments - 0

  • xlntgson Tuesday, 18 October 2011 10:28 PM

    ஆள் மாறாட்டம் செய்து காகிதத் தகைமையில் எங்ஙனம் கொரியாவில் பேசுவர்? நேர்முகப் பேட்டிகளை சந்திப்பார்கள் நம்மவர் போல் வெறும் காகிதப் பட்டத்துக்கு ஏமாறுகிறவர்களா கொரியர்கள்?
    ஒருவரது பெயருக்குப் பின்னால் எத்தனை எழுத்துகள் என்று பார்த்தே தகைமையை முடிவு செய்ய?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--