2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கிராமத்திற்கு வீடு எனும் செயல் திட்டத்தின் தேசிய நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய இளைஞர் வருடத்தினை முன்னிட்டு கிராமத்திற்;கு வீடு எனும் செயல் திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கம்பஹா, திவுலப்பிட்டியவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் 322 வீடுகளை நிர்மாணிப்பதற்கு பிரேதேச செயலாளர் பிரிவு தோறும் ஒரு வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.

இதற்கான நிதியொதுக்கீட்டினை இளைஞர் விவகார மற்றும் திறன்  அபிவிருத்தி அமைச்சின் மூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .