2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கம் சனியன்று கூடுகிறது

Super User   / 2012 நவம்பர் 08 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாரூக் தாஜுதீன்)

சுயாதீன நீதித்துறை மீது அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பின்  12ஏ (3)ஆம் பிரிவிற்கிங்கவே இந்த விசேட கூட்டம் நடைபெற்றவுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் நாளை  சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கான அழைப்பிதல் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது செயலாளர் சஞ்சய கமகே தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க ஆகியோருடன் ஏற்கவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பேச்சு நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்புக்கள் குறித்து உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .