2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டி – ரயில் விபத்து; ஒருவர் படு காயம்

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


( கே. என்.முனாஷா)


முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் nரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிறுக்கிழமை காலை 6 மணியளவில் நீர்கொழும்பு பெரியமுல்லை ரயில் கடவை அருகில் இடம்பெற்றுள்ளது .

விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் ரயில்வே கடவையின் ஒரு பகுதியும் உடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 72 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .