2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சிறையிலிருந்து சட்டவிரோத பொருட்கள் மீட்பு: கஜதீர

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலவரத்தில் முடிந்த வெலிக்கடை சிறைச்சாலை தேடுதல் நடவடிக்கையின் போது 41 தொலைபேசிகளும் 18 கிராம் போதைப்பொருளும் 22 சிம் காட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

சிறை வைக்கப்பட்டிருந்த கடும் குற்றவாளிகள் பல குற்றச்செயல்களை திட்டமிட்டு செயற்படுத்தியுள்ளதுடன் போதைவஸ்து கடத்தல்களையும் நெறிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கஜதீர நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் சிறையிலிருந்தவாறே வெளிநாடுகளிலுள்ள நண்பர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாய தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்காவின் கேள்விக்கு பதிலளித்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தான் விசேட அதிரடி படையினரின் உதவியை கோரியதாக கூறினார்.

இது சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 77ஆம் சரத்தின் படி சட்ட ரீதியானதாகும் என அவர் குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை ஆராய நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட குழு, இதன் பின்னணியில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மூவர் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான ஜோன் அமரதுங்க, இதற்கென ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .