2021 ஜனவரி 16, சனிக்கிழமை

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை உகண்டா ஜனாதிபதி பார்வையிட்டார்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள உகண்டா ஜனாதிபதி யோவெலி ககுடா முஸேவேனி, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை மேற்பார்வையிட்டார்.

இலங்கையில் தொழில்நுட்ப அறிவை உகண்டா நாட்டில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இலஙகை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உகண்டா ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவர்த்தையின் பின்னர் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் அழைப்பின் பேரில் இம மேற்பார்வை நடத்தப்பட்டது.

ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்திலுள்ள மோட்டார் இயந்திரவியல் பிரிவு, கணணி மற்றும் இயந்திரவியல் பிரிவு ஆகிய பல அம்சங்களை உகண்டா ஜனாதிபதி அவர்கள் மேற்பார்வையிட்டார்.

உகண்டா ஜனாதிபதியின் பாரியார் முஸெவெனி உள்ளிட்ட தூதுவர் குழுடன் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏதிலக்கரத்தின, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.ஆர்.தேஷப்பிரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .