2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 50 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 15 உள்ளுராட்சி மன்றங்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்த வாகனங்களை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களிடம் கையளித்தார்.

யாழ். மாநகர சபை, நொச்சியாகம பிரதேச சபை, கலேந்பின்துனுவௌ பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, மத்திய கண்டி பிரதேச சபை, கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, போரதீவு பிரதேச சபை, ஹக்மன பிரதேச சபை, அம்பாந்தோட்டை பிரதேச சபை, முசலி பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை மற்றும் ஹம்பாந்தோட்டை மாநகர சபை ஆகியவற்றுக்கே வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாகனங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0

  • rima Tuesday, 20 November 2012 04:25 PM

    இந்த வாகனங்களை இவரின் வீட்டாள் கொடுப்பது போன்று பேசுவார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .