2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இத்தாலிய பிரஜையின் சடலம் நீர்கொழும்பில் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

இத்தாலிய பிரஜை ஒருவரின் சடலத்தை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் ஸ்டபனில் (வயது 60) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டதாக ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.டி.சுனில் பெரேரா தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட இந்நபர் இம்மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் நீர்கொழும்பு, ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

அயலவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.   இவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை  4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில்  உயிரிழந்திருக்கலாம் எனவும் இது இயற்கை மரணமாக இருக்கலாம் என கருதுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .