2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மருமகள் தீமூட்டி கொலை: மாமனாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்   
     

கட்டுநாயக்காவில், மாமனாரினால் மருமகள் தீமூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபருக்கு தூக்குத் தண்டணை வழங்குமாறும் ஏனைய நபர்களை கைதுசெய்யமாறும் வலியுறுத்தி கட்டுநாயக்க பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் டயர்களுக்கு தீயிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்டவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டுநாயக்க, குரணை, நந்த மாவத்தையை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான செல்லப்புலிகே லக் சிகா சுதர்ஸனி ரோஸா என்ற  28 வயதுடைய பெண், கணவரின் தந்தையினால் கடந்த சனிக்கிழமை அதிகாலை தீமூட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில்; மரணமடைந்த பெண்னின் மாமனாரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X