2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அமைச்சர் ஹக்கீமின் பேச்சுக்கள் அடங்கிய நூல் வெளியீடு

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் அடங்கிய 'சாத்வீகப் போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்' என்ற நூல் வெளியீட்டு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான இந்த இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு 02, வொக்ஷோல் வீதி, 51 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .