2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பொதுபல சேனாவை தடை செய்ய ஒன்றுபட வேண்டும்: ஷாபி றஹீம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.அம்மார்

'பொதுபல சேனா அமைபினர் முஸ்லிம்களுடைய புனித குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வமைப்பின் அட்டூழியங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்த வண்ணம் செல்கின்றது. எனவே இவ்வமைப்பை இந்நாட்டில் தடைசெய்ய சகல முஸ்லிம் கட்சி ஆரசியல் பிரமுகர்களும் ஒன்றுபட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது' என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'முஸ்லிம்களுடைய புனித குர்ஆன் விடயத்தில் பொய்யான கட்டுக்கதைகளைப் பரப்பி இழிவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்புத் தொடர்பாக எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த அமைப்புக்கு எதிராக தீர்க்கமான தீர்மானத்தை நிறைவேற்றி அரசாங்கத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும்.

அரசாங்கத்தினுடைய  பங்காளிக் கட்சியாக இருந்தாலும்சரி, அரச தரப்பு அரசியல் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி முஸ்லிம்களுடைய சமய கலாசார பாதுகாப்புத் தொடர்பாக அச்சுறுத்தல் வருகின்றபோது அதைத் தொடர்ச்சியாக பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சாதகமான திருப்பமுனையாக அமையாது.

அரசாங்கத்துடன் இருந்து கொண்டு வெறும் பொய்யான ஊடக அறிக்கை மாத்திரம் விடுவதை நிறுத்தி விட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வருதல் வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--