2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.அஷ்ரப்கான்


மத்துகம கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிப்பன்ன பிரதேசத்தில் இயங்கும் ஏ டு இஸட் விஷேட கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் வழங்கப்படும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு ஆசிரியர் முஹம்மட் அஸாம் தலைமையில் இன்று(21) மாலை வெலிப்பன்ன பிரத்தியேக கல்வி நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபரும், வெலிப்பன்ன வை.எம்.எம்.ஏ. கிளையின் தலைவருமான ஏ.டப்ளியூ.எம். அஸார் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியினை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பலாந்த முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம். நுஹ்மான், பிரதி அதிபர் எம்.எஸ்.எம். உனைஸ், றஹூமானியா மகா வித்தியாலய பிரதி அதிபர் கே.பி.எம். இஸ்மாயீல், உதவி அதிபர் ஏ.ஏ.எப். பீபி, மத்தேகெதர தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் எம்.ரீ.எம்.பாயிஸ், ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.சீ.எம். அன்வர், ஏ.எச்.எம். அக்தாஸ், ஆசிரியர்களான எம்.எம். றிஸ்வான், எம்.எப். றிலீனா, எப். பர்வீன், எம். எஸ். நஸீரா அகியோரும் தொழிலதிபர் முஹம்மட் பர்ஹான் மற்றும் ஏ.ஜீ.எம். பைஸர் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--