2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நீதிமன்றினால் இனங்காணப்பட்ட நால்வருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புளத்சிங்கள மஹகம எனுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி, லால் குணவர்தன என்பவரை வெட்டியும் கற்களால் தாக்கியும் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த நால்வருக்கும் களுத்துறை மேல் நீதிமன்ற நீதவான் பி.பத்மன் சுரசேன மரண தண்டனை விதித்தார்.

பி.ஜீ.பியசோம(டானஸ்),ஜனக்க பியசிறி விதான, அநுரசிங்ஹ மற்றும் பியகமல் லக்ஷ்மன் ஆகிய நால்வருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .