2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஆஸியிலிருந்து திருப்பி அனுப்பட்டோரில் 21 பேருக்கு பிணை

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருப்பி அனுப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தவர்களில் 21 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இன்று உத்தரவிட்டார்.

அத்துடன் இவர்களுடன் ஆஜர் செய்யப்பட்ட ஏனைய நால்வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். ரோலர் மீன்பிடி படகை செலுத்திய மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டிலுள்ள நால்வரையே தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 25 பேரும் மூன்று வழக்குகளுக்காக இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பிணை வழங்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர். இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .