2025 ஜூலை 03, வியாழக்கிழமை

‘உள்ளூர் உற்பத்தி கதிரைகளை கொள்வனவு செய்யவும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண சபைக்கான புதிய சபா மண்டபத்துக்கு, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கதிரைகளை மட்டும் கொள்வனவு செய்யுமாறு, மேல் மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, மாகாண சபையின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவ்வாறான கதிரைகளைக் கொள்வனவு செய்வதை இரண்டு மாத காலத்துக்குள் மேற்கொள்ளுமாறும், அதுவரையிலும், தற்போதைய ​சபா மண்டபத்திலிருக்கும் கதிரைகளை புதிய சபா மண்டபத்துக்காக பயன்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண சபைக்கு, திடீ​ர் கண்காணிப்பு விஜயமொன்றை, நேற்று (19) மேற்கொண்டிருந்த போதே, அவர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .