2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

‘சண்.குகவரதனின் மாகாணசபை உறுப்பினர் பதவியை பறிக்க முடியும்’

Nirosh   / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணிக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுப்பட்டதாலேயே மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டாரென, ​அக்கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்ததோடு, கட்சிக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தால், அவரின் மாகாணசபை உறுப்பினர் பதவியையும் பறிக்க முடியும் எனவும் எச்சரித்தார்.

கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து​ரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்ததோடு, கடந்த வருடம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அரசமைப்புக்கு முரணான ஆட்சி மாற்றத்தின்போது, சண்.குகவரதன், எதிர்க்கட்சித் ​தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினருடன் இணைந்து செயற்பட்டிருந்தார் எனவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அரசமைப்புக்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்ட மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக, 650 மில்லியன்‌ ரூபாய் வரையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன், சண்.குகவரதன் தரப்பிலிருந்து பேரம்பேசலில் ஈடுபட்டிருந்தனர் எனவும், இது தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நாளை (11) முறைப்பாடு பதிவு செய்யப்போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தின் நற்பெயருக்கும், கட்சியின் நற்பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சண்.குகவரதன் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறிய அவர், இந்நிலைத் தொடர்ந்தால் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவராக பதவிவகித்து வந்த, சண்.குகவரதன் கட்சிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரவை நியமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சண்.குகவரதன் கட்சியிலிருந்து தற்காலிகமாகவே நீக்கப்பட்டுள்ளார். அவர் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி அவர் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--