2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

சிவகாமியின் சபதம் ‘கல்கி’

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாலயா இசை நடனக் கல்லூரியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும் கலாலயா இசை நடனக் கல்லூரியின் கட்டட நிதிக்காகவும், சிவகாமியின் சபதம் ‘கல்கி’ எனும் நாட்டிய நாடகம் அரங்கம் காணவுள்ளது.

இலங்கை தமிழ் மாதம் சங்கம் வழங்கவுள்ள இந்த நாட்டிய நாடகம் அரங்கம், கொழும்பு 3இல் அமைந்துள்ள புனித பிஷப் கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த தமிழ் சரித்திர நாடகமான சிவகாமியின் சபதம், ஏழாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பரந்துபட்ட சாம்ராச்சியங்களுக்கிடையே இருந்த இராணுவ மேலாண்மைக்கான போராட்ட அரசியல் பின்புலத்தில் ஒரு இளவரசன், ஒரு சிற்பியின் மகள் மீது கொண்ட காதல் கதையைச் சித்தரிக்கிறது.

நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, 0773 679656, 0777 686822, 0777 329881, 0714 893449 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--