2020 ஜூன் 01, திங்கட்கிழமை

தீர்வு வழங்கக் கூடிய கலந்துரையாடல்

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) காலை இடம்பெற்றது.

இதன்போது, நாடு பூராகவும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

குறப்பாக, சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதியப் பிரச்சினை, 2014.01.03ஆம் திகதி முதல் திணைக்களத்துக்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கேற்ப சம்பளத்தைக் குறைக்காது நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, அதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதற்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மேலும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான முறையொன்றைத் தயாரித்தல், கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்ட 10,000 ரூபாயைப் பெற்றுக்கொள்ளல், அரசாங்கத்தால் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் கொடுப்பனவு மற்றும் 2,000 ரூபாய் பிரயாண செலவைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல பிரச்சினைகள் இதன்போது முன் வைக்கப்பட்டன.

இதையடுத்து, இது தொடர்பில், நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்துக்கொள்ளவும் வினைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் சகல சமுர்த்தி வங்கிகளையும் கணினி மயப்படுத்தி நவீனப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஜே.பி.எஸ்.வீரக்கோன், நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X