2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

பஸ் நடத்துனரிடம் கொள்ளையடித்த நபர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மொரட்டுவை, கடுபெத்த டிபோவுக்கு சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை மிரட்டி, அவரிடம் இருந்து 8342 ரூபா பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் கைது செய்துள்ளனர்.

நேற்று (18), நடந்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுபெத்த டிபோவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று, கண்டி பிரதேசத்தில் வைத்து பழுதடைந்துள்ளதுடன், அதனை திருத்துவதற்காக, கண்டி நுகவெல டிப்போவிற்கு அனுப்பப் பட்டுள்ளது. பின்னர் பஸ் வண்டியை திருத்தும் வரை, அதன் சாரதியும், நடத்துனரும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள, ஹோட்டல் ஒன்றிற்கு, தேனீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர். அவ்வேளையில், அங்கு வந்த நபர் ஒருவர், பஸ் வண்டியின் நடத்துனரை மிரட்டி, அவரிடம் இருந்த சுமார் 8342 ரூபாய் பணத்தை, கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், உடன் விசாரணைகளை நடாத்திய பொலிஸார், சந்தேக நபரை, ஒரு மணிநேரத்திற்குள் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர், கொள்ளையடித்த பணத்தில் பெருந்தொகையை, உடனேயே ஹெரொயின் போதை பொருள் பாவனைக்கு, செலவு செய்திருந்தது, பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இதேவேளை பொலிஸார், குறித்த சந்தேக நபரை, கண்டி பிரதான நீதவான் முன், இன்று ஆஜர் படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--