2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கிவைப்பு

Editorial   / 2018 மே 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில், நேற்று (19), ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சிறப்பான சேவைக்கான பதக்கமானது, விசேட விருதாக கருதப்படுவதுடன், லெப்டினன் கேனல் மற்றும் அதனிலும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் கப்பல் மற்றும் விமானப் படைகளில் அதற்கு சமனான பதவிகளை வகிக்கும் 25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவை பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முப்படைகளில் தற்போது சேவையாற்றும் மற்றும் இளைப்பாறிய அதிகாரிகள் 50 பேருக்கு, இதன்போது ஜனாதிபதியால் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது.

முதலாவதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கப்பற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரனசிங்க மற்றும் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கு, ஜனாதிபதியால், பதக்கம் வழங்கப்பட்டது.

அதன்பின்னர், ஏனைய அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கம் வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--