Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில், கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரண்டு விபசார விடுதிகள் பொலிஸாரால் நேற்று (23) முற்றுகையிடப்பட்டதுடன் பன்னிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியின் உரிமையாளர் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மருதானை சங்கராஜ மாவத்தையில் மற்றுமொரு விபசார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. அதனை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவரும் மேலும் 7 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 24 வயது முதல் 48 வரையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் இன்றைய தினம் (24) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago