2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

CFL மின்குமிழ்களை அ​ழிக்க உத்தரவு

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல்களை மாற்றியமைத்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை CFL மின்குமிழ்கள் நுகர்​வோர் அதிகார சபை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 31,000 CFL மின்குமிழ்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மின்குமிழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,இவை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பரிந்துரைக்கமைய குறித்த CFL  மின்குமிழ்களை அழிக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .