2025 ஜூலை 05, சனிக்கிழமை

அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் வரவு - செலவுதிட்டம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகிறது.

இதன்படி, இன்று வியாழக்கிழமை (22) விவசாய அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.

இன்று அமர்வுகள் ஆரம்பமாகியபோது,

இன்று உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தெரிவிக்கவேண்டிய கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். 5 நிமிடம் முடியும் போது நான் மணி ஒலி எழுப்புவேன். அதன்பின்னர் அடுத்த உறுப்பினர் உரையாற்ற வேண்டும். அவர் உரையாற்றாவிடின் மற்றைய உறுப்பினருக்கு உடனடியாக சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், அவைத்தலைவராக இருப்பினும் நானும் அவையில் ஒரு உறுப்பினரே. எனவே, நானும் உரையாற்ற வேண்டும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதற்கு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா,

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாங்கள் ஒன்றிணைந்து என்ன பேசவேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது தொடர்பில் கலந்தாலோசித்து தெரிவிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,

“எங்களுக்கு 5 நிமிடங்கள் போதும். ஆனால், சில உறுப்பினர்கள் தேவையற்ற விடயங்களைக் கதைக்கின்றனர். அதனை முதலில் நிறுத்துமாறு கூறுங்கள்” எனத் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் வரவு - செலவு திட்டம் செவ்வாய்க்கிழமை (20) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான விவாதம், நேற்றுப் புதன்கிழமை (21) இடம்பெற்ற போது வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றியிருந்தார்.

இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதன் உச்சக்கட்டமாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது சிவாஜிலிங்கம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே அவைத்தலைவர் இன்று (22) அனைத்து உறுப்பினர்களுடைய உரைக்கும் 5 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .