2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து சி.வி.க்கு மகஜர்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து, தங்கள் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு புதன்கிழமை (30) காலை 10 மணிக்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளனர்.

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களின் தந்தையர் விடுவிக்கப்படாமையால், தாங்கள் பல வழிகளிலும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து செய்யுமாறு வலியுறுத்தி இவர்கள் மகஜர் கையளிக்கவுள்ளனர்.

அரசியல் கைதிகளின் சுமார் 20 பிள்ளைகள் இணைந்து இவ்வாறு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X