2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அலைபேசி அலறியதால் கோபமடைந்தார் அவைத்தலைவர்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவைச் செயலாளர் மரியதாஸ் ஜெகூவின் அலைபேசி தொடர்ந்து அலறிக்கொண்டு இருந்தமையால் கோபமடைந்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அலைபேசியுடன் வெளியில் செல்லுங்கள் என அவைச் செயலாளருக்கு கூறினார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) வடமாகாண சபை அமர்வு நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவைச் செயலாளரின் அலைபேசி முதல் முறையாக ஒலிக்கும் போது, அவையில் அலைபேசி கொண்டு வரவேண்டாம் என தான் முன்னர் கூறியதை அவைத்தலைவர் நினைவுகூர்ந்தார். ஆனால் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது தடவையாக அலைபேசி அலறியமையால் அவைத்தலைவர் கோபமடைந்து வெளியில் செல்லுமாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .