2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அழகுக் கலை கண்காட்சி

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசமட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக் கலையும், மனைப்பொருளியலுக்குமான கண்காட்சி, வியாழக்கிழமை (01) கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சுனேத்ரா சுதாகர் தலைமையில் இடம்பெறும் இந்த கண்காட்சியில், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இதன்போது, ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக் கலையும், மனைப் பொருளியலுக்குமான கண்காட்சிக் கூடம், வைபவரீதியாக திறந்துவைப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, குறித்த திணைக்களத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிச் சென்றவர்களும் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X