2021 ஜனவரி 23, சனிக்கிழமை

‘ஆட்சியாளர்களுக்கு சவால் விடுப்பது பொருத்தமல்ல’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு, உறவினர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், இதனை நீங்கள் தடுத்து விடுங்கள்; நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று ஆட்சியாளர்களுக்கு சவால் விடுப்பது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கடி நாயை உசுப்பிவிட்டு கடிவாங்குவது தமது நோக்கமல்ல எனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்கப் போவதில்லையென சொல்லியதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதெனவும் ஆனால், அதன் பிற்பாடு அவ்வாறு தான் சொல்வில்லையென்றும் ஒரு செய்தி வெளிவந்ததாகத் தெரிவித்தார்.

மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதை இதுவரை யாரும் எதுவும் தடுத்ததில்லையெனத் தெரிவித்த அவர், தங்களைப் பொறுத்தவரை மிக நிதானமாக இறந்தபோன எங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற பணிகளைச் செய்து வருகிறோமெனவும் கூறினார்.

அவ்வாறு பணிகளை ஆற்றுகின்ற போது தடைகள் வந்தால், அந்த இடத்தில் இதனைப் பற்றி பரிசீலிப்பது பொருத்தமானதாக இருக்குமெனவும் அதை விடுத்து தாங்கள் முற்கூட்டியே சவால்கள் விடுவதை தவிர்த்துக் கொள்வது தான் பொருத்தமெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .