2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘ஆதனவரி அதிகரிக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

2020ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட மக்களுக்கு, மேலும் வினைத்திறனான சேவையை வழங்க ஆதனவரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் 08.08.2019ஆம் திகதிய பொதுச்சபைக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம், ஆதனவரி சதவீதம் அதிகரிக்கப்பட்டதாகவும் கூறினார். 

இதற்கமைய, நிலம் வதிவிடங்கள் என்பவற்றுக்கு 8 சதவீதமாகவும் வியாபார நிறுவனங்களுக்கு 10 சதவீதமாகவும் அதிகரிக்க சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த அனுமதியானது இம்மாதம் 1ஆம் திகதியே தமக்குக் கிடைக்கப்பெற்றதாகவும் கூறினார். 

எனவே, ஜனவரி 2ஆம் திகதியில் இருந்து மேற்படி சதவீதங்களில் ஆதன வரி அறவிடப்படுமெனத் தெரிவித்த அவர், எனவே, ஜனவரி 1ஆம் திகதியில் ஆதனவரி செலுத்தியவர்கள், அதிகரிக்கப்பட்ட தொகையை நிலுவையாகச் செலுத்துமாறும் கேட்டுக்​கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .