Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 29 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த குடும்பஸ்தரை, 100 மணித்தியாலங்கள் சமுதாயம்சார் சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் திங்கட்கிழமை (28) தீர்ப்பளித்தார்.
அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் தீர்ப்பளித்தார்.
மேற்படி குடும்பஸ்தர் அபராதப் பணத்தைச் செலுத்த இயலாத பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதை அறிந்த சமுதாய சீர்திருத்த அதிகாரி, இது தொடர்பில் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, வழக்கை மீள் விசாரணை செய்த நீதவான், குடும்பஸ்தரை 100 மணித்தியாலங்கள் சமுதாயம்சார் சீர்திருத்த பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
40 minute ago
53 minute ago