2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ஆளுநர் அரசியல் ரீதியாக பார்க்கின்றார்: சி.வி.

George   / 2016 மே 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவின் பேச்சு, நடவடிக்கை வேறுவிதமாக இருக்கின்றது. அவர் அரசியல்வாதியாக இருந்தவர். மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். அதனால், அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். பொது நூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'முன்னர் இருந்த ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, அரச உத்தியோகஸ்தர்களின் பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகினார். இப்போதுள்ள ஆளுநரை நாங்கள் குறைகூறவில்லை.  எமக்கும் அவருக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். எவ்வாறு அது சாத்தியமாகும் என்பது தொடர்பில் எனக்கு இப்போது கூற முடியாது.

ஆனால், அவர் தனது பதவிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்துகொண்டால் எந்த சிக்கலும் ஏற்பாடாது. அவர் ஒரு நல்ல மனிதர்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .