2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்: கூட்டமைப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினெட்டு வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம், பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயர்களில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பதினெட்டு வயது மாணவனின் இந்த செயல், சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அதற்காக அவரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை.எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் நாம் ஒற்றுமையாக தெரிவிப்போம் பகிர்ந்து கொள்ளுவோம்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .