2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்தோர் உலர்உணவு ஒரு வருடத்துக்கு வழங்க வேண்டும்

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

உலக உணவுத் திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கு 6 மாத காலப்பகுதிக்கு வழங்கப்படும் உலர் உணவை 1 வருட காலத்துக்கு வழங்க வேண்டும்  எனக்கோரும் தீர்மானம் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் இணைத்தலைமைகளின் கீழ் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கு இந்த உலர் உணவு வழங்கப்படவேண்டும் என இந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .