Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 04, வியாழக்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் முக்கியமானது. அதற்கு பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள். தீர்வு காணவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடை மாநாட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்து முற்படுகின்றது. யுத்தத்தின் பின்னரான வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான நிதி அந்த மாநாட்டில் வைத்து வழங்குமாறு சர்வதேசத்திடம் கோரியுள்ளது.
அந்த மாநாடு மார்ச் மாதம் அளவில் நடத்த திட்டமிடப்பட்ட போதும், இன்னமும் நடைபெறவில்லை. ஜப்பான் நாடு மட்டும், இலங்கைக்கு ஒரு தொகை நிதியை வழங்கியுள்ளது. மேற்கத்தைய நாடுகள் எவையும் வழங்கவில்லை.
அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கவுள்ளது. அதன்மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும், போர்க்குற்ற விசாரணை மூலம் பொறுப்புக்கூறல் வேண்டும் என சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றது.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்னேற்ற நிலைமைகளை பார்த்துத்தான், சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு நிதியுதவி வழங்கும். இந்த இரண்டு விடயங்களும் நடைபெற்றால் தான், வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும் பாரியளவு நிதி வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. அதன் மூலம் பாரியளவு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
03 Mar 2021