Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன்
யாழ்ப்பாணத்தின் சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால் பச்சை மிளகாயின் அறுவடையானது வீழ்ச்சியடைந்து, சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு குறைவடைந்தமையால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 1,000 ரூபாய் வரையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த வாரத்திலேயே சற்றுக்குறைந்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் யாழ்ப்பாணத்து சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. திடீர் மழையால் வெங்காயச் செய்கையானது பெருமளவுக்கு அழிவடைந்தமையால் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
15 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
56 minute ago