2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

உப பாதை இன்மையால் பெரிய பொக்கணை ஊடான போக்குவரத்து பாதிப்பு

Niroshini   / 2016 மே 22 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொடர்ந்தும் வெள்ளநீர் வழிந்தேடுவதால் வாதரவத்தை பெரிய பொக்கணை ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பெய்த அதிகமழை காரணமாக இப்பகுதி சிறுதீவு போல் காட்சியளிப்பதுடன் வீதியை மேவி தொடர்ந்தும் நீர் பாய்ந்து வருகின்றது.

இதனால் வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்கள் இப்பகுதிக்கு உள்ளே வருவதிலும் வெளியில் செல்வதிலும் பாரிய சிரமங்கயை எதிர்நோக்கியுள்ளன.

இப் பகுதியில் வலி. கிழக்கு பிரதேச சபையின் ஊடாக பாலம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு முன் உப பாதை ஒன்றை அமைக்க அதிகாரிகள் தவறியிருந்தனர்.

இவ் விடயம் பலமுறை வீதி அமைப்பு கண்காணிப்பு குழுவினருக்கு தெரியப்படுத்தியிருந்தும் உப பாதை அமைக்கப்படவில்லை.

தற்போது புதிதாக அமைக்கப்படும் பாலத்துக்கு அண்மித்த இரண்டு பகுதிகளும் சேறும் சகதியுமாக காணப்படுவதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாலத்தை அமைக்கும் முன்னர் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழு மக்கள் வழங்கிய ஆலாசனைகளை நெறிப்படுத்தியிருந்தால் தற்போது இப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என ஆதங்கம் வெளியிடுகின்றனர்.
இப் பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் பாதை இன்மையால் உள்ளே வருவதில்லை. மேலும், வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளார்கள் அவஸ்தைக்குள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.

எனவே, பெரியபொக்கணை பிரதான வீதியில் அமைக்கப்படும் பாலத்தை அண்மித்த பகுதியில் உப பாதை ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .