2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உரிமையைப் பெற்றுக்கொள்வது அவசியம்: சாந்தி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்வது அவசியமானதொன்று என்பதுடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

'நான் வன்னியில் பிறந்து, இறுதி யுத்தத்தில் எமது மக்களுடன் இருந்து எனது ஒரு காலையும் இழந்த நிலையில் உள்ளேன். திட்டப் பணிப்பாளராக கடமையாற்றிய நான், எமது மக்களின் கஷ்ட்ங்கள், வலிகள் தொடர்பில் நன்கறிந்தவள் ஆவேன்' என்றார்.

'விதவைகள், மாற்றுவலுவுள்ளோர், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சிறுவர்கள், இளைஞர், யுவதிகளை அடித்தளமாகக் கொண்டு எனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன்.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் யுத்தப் பாதிப்புக்குள்ளானவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன். பெண்களின் பாதுகாப்பின்மை என்பது தொடர்பில் ஆக்கபூர்வமாக நடவடிக்கையை மேற்கொள்வேன்' என கூறினார்.

'சர்வதேசத்துக்கு ஒரு யுத்த வடுவின் சின்னமாகவுள்ள நான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சமஷ்டி கோரிக்கையை நடைமுறைப்படுத்தல், வடக்கு, கிழக்கு இணைப்பு ஆகியவற்றுக்காக பாடுபடுவேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .