2021 மே 12, புதன்கிழமை

உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் யாழிலும் ஆரம்பித்து வைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம், யாழ். மாவட்டத்திலும் திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு, மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வாழ்வின் எழுச்சிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்படி நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

மாவட்டச் செயலர் இதுதொடர்பில் கருத்துக்கூறுகையில், வெளிநாட்டு உணவு இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி எமது நிலவளங்களை அதிகமாக பயன்படுத்தி அதியுச்ச பலனை பெறுவதன் மூலம் இலங்கையை தன்னிறைவான தேசமாக உருவாக்க முடியும்.

பால், கால்நடை மற்றும் மீன்பிடி உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் உணவு இறக்குமதிக்காக செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தல், இரசாயன பசளை பாவனைகளை கட்டுப்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கு இசைவான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரம்மிக்க உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .