2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு, யாழ்ப்பாணத்தில் இம்முறை நடைபெறவுள்ளதாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஓகஸ்ட் மாதம் 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வு, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வு, யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

1974ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில். இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் உருவாக்கப்பட்டது. தமிழின் மொழி பண்பாடு கலாச்சாரங்களை பேணி பாதுகாத்து அதனை உலகுக்கு எடுத்துச் செல்வதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .